Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வின்னர் ஆரினு சொல்லி முடிச்சுருங்கப்பா....!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (17:09 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிந்துவிடும். இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் நிகழ்ச்சி கொஞ்சம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நேற்று வீட்டில் இருந்து ஷிவானி வெளியேற்றப்பட்டார். இதில் சோம் மற்றும் ஆரி பைனலுக்கு சென்றுள்ளனர்.
 
இந்த முறை நிச்சயம் ஆரி தான் வெற்றியாளர் என மக்கள் எப்போதோ கணித்துவிட்டனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட அர்ச்சனா , நிஷா , ஜித்தன் ரமேஷ், ரேகா உள்ளிட்டோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
 
இந்த கூட்டம் வெளியில் போனதற்கு அப்புறம் தான் பிக்பாஸ் சிறப்பாக இருந்தது. இப்போது மீண்டும் இந்த அன்பு கேங் உள்ளே வந்திருப்பதால் என்னவெல்லாம் நடக்கபோகுதோ என எல்லோரும் முணுமுணுத்து வருகின்றனர். இருந்தும் ஆடியன்ஸ் சனம் மற்றும் சுரேஷுன் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
 
இரண்டாவது ப்ரோமோவில் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக ஆட்டம் போட்டு குதூகலித்துள்ளனர். மேலும் நிஷா, ரம்யாவிடம் வெளியில் போனதற்கு பிறகு மக்கள் எல்லாம் scripted என்று சொல்கிறார்கள் என கூறி இந்த நிகழ்ச்சி மக்களிடம் எப்படி பிரதிபலித்துள்ளது என்பதை தெரிவித்தார். 
 
இந்த அன்பு கேங் வந்த பிறகு ரியோ மற்றும் சோமை தான் கையில் பிடிக்கமுடியவில்லை. சனம் எங்கே..? சனம் வந்தா ஆரிக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும் என்பது தெரிந்தே அவரை முதலில் உள்ளே அனுப்பாமல் இந்தக் கூட்டத்தை அனுப்பியுள்ளார்கள்.
 
இவ்வளவு நாட்கள் தனியாக விளையாடிய ஆரிக்கு இது ஒன்றும் புதிது இல்லை. இனி ரியோ சோமைத்தான் கையிலையே பிடிக்க முடியாது. ரேக்கா என்று ஒரு கேரக்டர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்ததே மறந்துவிட்டோம் இப்போதான் நியாபகம் வருது. அதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பாலா மற்றும் ஆரி இவரும் தங்களது அனுபவத்தை குறித்து சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் பகிர்ந்துகொண்டனர். யப்பா விஜய் டிவி.... நீங்க கம்பு சுத்துறத கேக்க முடியல சட்டுனு ஆரி தலைவனுக்கு கப்பு  கொடுங்க நாங்க போய்கிட்டே இருக்கோம்...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நபர், மரணமற்ற மற்றொரு நபரை சந்திக்கின்றார்... ‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர்..!

ஒரே நாளில் வெளியாகிறதா விக்ரம் மற்றும் ஜெயம் ரவி படங்கள்?

கிளாமர் தூக்கலாக யாஷிகா ஆனந்த் கொடுத்த போஸ்… கலர்ஃபுல் போட்டோஸ்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் போட்டோஸ்!

ஷங்கரை அடுத்து அல்போன்ஸ் புத்ரனுக்குக் கதை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments