Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"மாஸா என்ட்ரி கொடுக்குறது பெருசில்ல" பிக்பாஸ் 3 ப்ரோமோ வீடியோ !

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (12:08 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது. 
 
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது  சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய  ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் " மாஸா என்ட்ரி கொடுக்குறது பெருசில்ல, எக்ஸிட் ஆகாம இருக்குறது தான் பெருசு" பிக்பாஸ் 3 டேஸ் டூ கோ என கமல் கெத்தாக பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் இனி திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. காணத்தவறாதீர்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments