Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமி படத்தின் விலையைக் கேட்டு பின் வாங்கிய ஓடிடி நிறுவனம்… இழுபறியில் பேச்சுவார்த்தை!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (11:13 IST)
பூமி படத்தின் விலையைக் கேட்ட ஓடிடி நிறுவனங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டு பின் வாங்குகின்றனவாம்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லக்‌ஷ்மண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பூமி’. விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் விவசாயம் செய்யும் ஹீரோவாகவே நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தில் நிதி அகர்வால் நாயகியாகவும், சதீஷ் நண்பர் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமத்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ், சிங்ஹம் உள்ளிட்ட பிரபல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டுட்லீ இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். விவசாயத்தை மையமாக கொண்டு சமூக கருத்து பேசும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படம் லாக்டவுன் இல்லை என்றால் ரிலிஸ் ஆகி இருக்கும்.

இப்போது தியேட்டர்கள் திறப்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்பதால், இந்த படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக அமேசான் ப்ரைம் தளமும் இந்த படத்தை வாங்க முயற்சி செய்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் 26 கோடி ரூபாய் என விலை சொல்ல, அந்த தொகை கட்டுப்படியாகாது என அந்நிறுவனம் பின் வாங்கியுள்ளதாம். அதே போல ஹாட்ஸ்டார் நிறுவனமும் அந்த தொகை கட்டுப்படியாகாது என சொல்ல இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments