Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டுக்காக ஒரு படம், இயற்கைக்காக புதுப்படம்

Webdunia
வியாழன், 28 மே 2015 (16:29 IST)
மலையாளத்தின் முக்கியமான இயக்குனராக வளர்ந்து வருகிறார் அனில் ராதாகிருஷ்ணன் மேனன். 2013 -இல் இவரது இயக்கத்தில் நார்த் 24 காதல் வெளியானது. கமலின் அன்பே சிவத்தின் சாயலைக் கொண்ட மலையாளப் படம். படம் ஹிட்.
 
அடுத்து சென்ற வருடம் சப்தமஸ்ரீ தஸ்கரஹா என்ற படத்தை இயக்கினார். சிறையில் ஒன்று சேரும் சில அப்பாவிகள், சில அடப்பாவிகள் இணைந்து ஒரு கொள்ளையை நடத்துவதுதான் கதை.
 
இதையடுத்து அவர் இயக்கும் படத்துக்கு, லார்ட் லிவிஸ்டோன் 7000 கண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பரத்தும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் இயற்கையை மையப்படுத்தியது. இயற்கையின் அருமைகளை செயற்கைத்தனம் இல்லாமல் சொல்லும் படைப்பு என அனில் கூறியுள்ளார்.
 
முதலிரண்டு படங்களையும் வித்தியாசமாக தந்த அனிலின் மூன்றாவது படமும் முத்தாக இருக்கவே அதிக வாய்ப்பு.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments