Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவரானதும் பாரதிராஜா செய்த முதல் வேலை – விஷாலுக்கு மேலும் நெருக்கடி !

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (09:16 IST)
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் தனது சிஷ்யரான பாக்யராஜ் அணிக்கு இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விஷாலுக்கு எதிராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று  நடைபெற்ற மிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் ஒருமனதாக இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.

இயக்குனர் சங்கத்துக்குத் தலைவரான பின்பு முதல் வேலையாக பாரதிராஜா நடிகர் சங்கத் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.  விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா ‘ நடிகர் சங்கத் தேர்தலில் எனது சிஷ்யர் பாக்யராஜ் அணி வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு வருவதற்கான முழுத்தகுதியும் உள்ளவர் பாக்யராஜ்’ எனக் கூறியுள்ளார். ஏற்கனவே விஷால் தலைமையிலான அணி மீது துணைநடிகர்கள், நாடக நடிகர்கள் மற்றும் கடந்த தேர்தலில் விஷால் அணியில் இருந்தவர்கள் உள்பட எல்லோரும் அதிருப்தியில் உள்ள நிலையில் இப்போது பாரதிராஜாவும் அவருக்கு எதிராகக் களமிறங்கியுள்ள நிலையில் விஷால் அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments