பாரதிராஜாகிட்ட விஜய்யை ஹீரோவாக்க சொன்னேன்… விழா மேடையில் பேசிய எஸ் ஏ சி!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (08:10 IST)
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார். இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.

ஆனாலும் எங்கு சென்றாலும் அவரால் விஜய்யைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ பட இசை வெளியீட்டு விழாவி பேசிய அவர் “நான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர சென்றேன். ஆனால் அவர் நாம் நண்பர்களாகவே இருப்போம் எனக் கூறிவிட்டார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து விஜய்யை ஹீரோவாக்க சொல்லி கேட்டு சென்றேன். அப்போதும் மறுத்துவிட்டார். இப்படி என் வாழ்க்கையில் நான் கேட்ட இரண்டுமே எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments