விஷால் படத்தில் முக்கிய வேடத்தில் சீரியல் நடிகர் அகிலன்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:39 IST)
பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் அகிலன்.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இதில் விஷாலுடன் டிம்பிள் ஹயாத்தி, யோகி பாபு மற்றும் ரவினா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மா புகழ் அகிலன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் விஷாலுடன் படப்பிடிப்பு தளத்தில் இருகும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா நடிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஆபாச தளங்களில் நடிகர் சிரஞ்சீவியின் வீடியோ.. சைபர் க்ரைம் போலீசில் புகார்..!

இது கோவில் இப்படியெல்லாம் செய்ய கூடாது.. திருப்பதியில் ரசிகர்களை கண்டித்த அஜித்..!

‘சூர்யா 46’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை!

50 கோடி ரூபாய் மைல்கல்லைத் தொட்ட மாரி செல்வராஜ் &துருவ் விக்ரம்மின் ‘பைசன்’!

அடுத்த கட்டுரையில்
Show comments