Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3டியில் வெளியாகும் அக்‌ஷய் குமாரின் அடுத்த படம்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:26 IST)
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பெல்பாட்டம் திரைப்படம் திரையரங்குகளில்தான் வெளியாகும் எனப் படக்குழு உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் தயாராகி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவன்ம் பெரும் தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அக்‌ஷய் குமார் படம் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என குறுக்கிட்டு தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி சொல்லி ரிலீஸை ஆகஸ்ட் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் 3 டியில் வெளியாக உள்ளதாம். திரையரங்கில் இந்த படத்தை மிகவும் நெருக்கமாக உணரும் வகையில் இந்த முடிவை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்பட ரிலீஸ்!

இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது ஏன்?.. தயாரிப்பாளர் விளக்கம்!

ஒரே ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கே இப்படியா?.. அலறியடித்து ஓடும் சிங்கம்புலி!

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

அடுத்த கட்டுரையில்
Show comments