Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியில் அக்னி நட்சத்திரத்தை ரீமேக் செய்யும் பிஜோய் நம்பியார்

இந்தியில் அக்னி நட்சத்திரத்தை ரீமேக் செய்யும் பிஜோய் நம்பியார்
, சனி, 9 ஏப்ரல் 2016 (20:47 IST)
சைத்தான், டேவிட், வசீர் படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக் நடித்த அக்னி நட்சத்திரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். மணிரத்னத்திடமிருந்து முறைப்படி ரீமேக் உரிமையையும் அவர் வாங்கியுள்ளார்.


 
 
அக்னிநட்சத்திரத்தை மணிரத்னம் கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு ஆகியோரை வைத்து தமிழ், தெலுங்கில் எடுப்பதாக முன்பு ஒரு பேச்சிருந்தது. இந்நிலையில், அதன் இந்தி ரீமேக் உரிமையை பிஜோய் வாங்கியுள்ளார்.
 
இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப அக்னி நட்சத்திரம் கதையை அவர் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil