Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்கும் துணிந்தவன் இடைவேளையில் பீஸ்ட் அரபிக்குத்து… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (16:06 IST)
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்த படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் எழுந்தது.

இந்நிலையில் இன்று சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்கு ஒரு சிலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் தந்து கொண்டிருக்கின்றனர்.

அதைவிட இந்த படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இடைவேளையின் போது விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலை திரையிட்டுள்ளனர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர். இந்த பாடலுக்கு ரசிகர்கள் திரையரங்கில் ஆடி கொண்டாடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments