Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக்தி மான் படத்தில் அல்லு அர்ஜுன் இல்லை… அவர்தான் நடிப்பார் –பாசில் ஜோசப் பதில்!

vinoth
திங்கள், 23 ஜூன் 2025 (10:59 IST)
1997 முதல் 2004 வரை மிகவும் பிரபலமாக இருந்த டிவி தொடர் சக்திமான். இந்தியில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் பல இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் புகழ் பெற்றது. அப்போதைய 90ஸ் கிட்ஸ் சக்திமான் காப்பாற்றுவார் என மாடியில் இருந்து குதித்த சம்பவங்களும் ஏராளம்.இந்த தொடரை முகேஷ் கண்ணா தயாரித்து, தானே சக்திமானாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சக்திமான் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா அறிவித்திருந்தார். ஆனால் கரோனா காரணமாக அந்த படம் தொடங்குவதில் தாமதமானது. சக்திமான் படத்தில் ரண்வீர் சிங் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் முகேஷ் கண்ணா சக்திமான் கதாபாத்திரத்து ரண்வீர் சரியான தேர்வு இல்லை என்று சொல்லியிருந்தார்.

இதற்கிடையில் பாசில் ஜோசப் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் சக்திமானாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவியது.ஆனால் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பாசில் அதை மறுத்துள்ளார். அதில் “சக்திமான் படத்தில் கண்டிப்பாக ரண்வீர் சிங்தான் நடிப்பார். இது சம்மந்தமாக சிலர் சுயலாபத்துக்காக தகவலைப் பரப்புகிறார்கள்” எனக் கூறியுள்ளார். ஆனால் இதில் சக்திமான் படத்தைத் தான் இயக்குவேனா என்பது குறித்து எந்த விளக்கத்தையும் பாசில் அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முறையாக நடிகர் சங்கத்தின் தலைவரான ஒரு நடிகை தேர்வு: திரையுலகினர் வாழ்த்து

கத்தரிப்பூ நிற சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அட்வென்ச்சரஸ் மோடில் போட்டோஷூட் நடத்திய சம்யுக்தா மேனன்!

சென்னையில் இளையராஜாவின் சிம்ஃபொனி இசைக் கச்சேரி எப்போது?... வெளியான தகவல்!

பா ரஞ்சித்தின் அடுத்த படத்துக்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments