Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலகிருஷ்ணாவின் ''பகவந்த் கேசரி'' பட டீசர் ரிலீஸ்... இணையதளத்தில் வைரல்

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (18:22 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள  பகவந்த் கேசரி பட டீசர்  இன்று வெளியாகியுள்ளது.

பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்  வீரசிம்மா ரெட்டி.  இப்படம் பாலகிருஷ்ணாவின் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில்,  இப்படம் ஹிட்டானது.

இதையடுத்து அவர் பகவந்த் கேசரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் உள்பட நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இப்படத்தின்  முதல் லுக் போஸ்டர்  நேற்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இப்படமும் அவரது  வழக்கம் போல ஆக்‌ஷன் படம் என்பதை உறுதி செய்வது போல கையில் ஆயுதத்தோடு பாலைய்யா இருக்கும் விதமாக போஸ்டர் இருந்தது அவரது ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த நிலையில், இன்று பகவர்ந்த் கேசரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியான 7 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளார்களைப் பெற்றுள்ளது. ஒரு லட்சம் லைக்குகள் பதிவிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments