Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவையே ஆச்சரியப்படுத்திய பாலா

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (14:00 IST)
இயக்குநரான பாலா, மொத்த தமிழ் சினிமா உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.



‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கிவரும் படம் ‘நாச்சியார்’. பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில், ஜோதிகா நடிக்கிறார். லோக்கல் ரவுடியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை, பாலாவே தயாரிக்கிறார்.

பொதுவாக, பாலா ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தால், குறைந்தது ஒரு வருடமாவது ஆகிவிடும். அவர் இஷ்டத்துக்கு மெதுவாக எடுப்பார். அவர் படத்தில் கமிட்டாகும் நடிகர் – நடிகைகள், அடுத்த ஒரு வருடத்துக்கு எந்தப் படத்திலும் நடிக்க முடியாது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த ‘நாச்சியார்’ படத்தில், முக்கால்வாசியை முடித்துவிட்டாராம். அடுத்த மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு, இந்த வருடத்திற்குள்ளேயே ரிலீஸ் செய்யவும் திட்டமாம். பாலா மாறியது எப்படி? என்ற ஆச்சரிய கேள்வி எழுந்துள்ளது.


 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments