Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றும் மூன்றும் நான்கு - பாலாவின் வருடாந்திர கணக்கு

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2014 (14:45 IST)
தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும் என்று பாலா தொடங்கியதுதான் பி ஸ்டுடியோஸ். ஆனால், முதல் படம் மாயாவியிலேயே பிரச்சனை. மாயாவியை தயாரித்தது பாலா என்றாலும் பிறகு தாணுவின் பெயரில்தான் படத்தை வெளியிட முடிந்தது.
 
இந்த வருடம் மிஷ்கினின் பிசாசு படத்தை பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ளார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது திட்டத்தை தெரியப்படுத்தினார் பாலா.
 
இனி வரும் ஒவ்வொரு வருடமும் ஒரு படத்தை இயக்குவது என்றும் மூன்று படங்களை தயாரிப்பது எனவும் முடிவு செய்துள்ளாராம். இந்த வருடம் திட்டம் பிசகினாலும் அடுத்த வருடம் முதல் இந்த ஒன்றும் மூன்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
 
என்றோ பாடல் பதிவு முடிந்த தாரை தப்பட்டை படத்தை நவம்பர் 26 தான் தொடங்கயிருக்கிறாராம். இந்த வேகத்தில் வருடத்துக்கு ஒரு படம் பாலா இயக்குவார் என்று நினைக்கிறீங்க...?

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

Show comments