பாலாவின் ‘வணங்கான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அஜித்துடன் மோதலா?

Mahendran
செவ்வாய், 19 நவம்பர் 2024 (10:37 IST)
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான வணங்கான் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சற்று முன் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில் தான் அஜித்தின் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி ஆகிய இரண்டில் ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாலா படமும் அஜித் படமும் ஒரே நாளில் மோத அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படம் சூர்யா நடிப்பில் உருவான நிலையில், திடீரென சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வணங்கான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாலாவின் இயக்கத்தில் ஒரு தரமான படத்தை பொங்கல் பண்டிகைக்கு எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
 
அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்பட பலர் நடித்த வணங்கான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments