Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் 'பாகுபை 2' ரிலீஸ் ஆகாதா?

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (23:36 IST)
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் வழக்கம்போல் கர்நாடகாவில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் இந்த முறை எழுந்துள்ள சிக்கலுக்கு சத்யராஜின் தமிழ் உணர்வுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது


 




கடந்த சில வருடங்களாகவே  காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி சத்யராஜ் கடுமையாக பல முறை கர்நாடக அரசை விமர்சித்து வந்துள்ளார். தனது பேச்சிற்காக சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையே 'பாகுபலி 2' படத்தை கர்நாடகத்தில் ரிலீஸ் செய்ய வ்டமாட்டோம் என்றும் ஒரு குரூப் போராட்டம் செய்து வருகின்றது.  இந்த சர்ச்சை படரிலீஸ் நாள் நெருங்கும்போது இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இதே பிரச்சனை காரணமாகத்தான் பாகுபலி 2 ட்ரைலர் வெளியான அன்று கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் அங்கு எந்த தியேட்டரிலும் ட்ரைலர் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கெல்லாம் மசிவது சத்யராஜின் பழக்கம் இல்லை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சத்யராஜ் தரப்பு கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“வளர்ந்து வாங்க ரமணா 2 எடுப்போம்… “ சண்முகபாண்டியனை வாழ்த்திய இயக்குனர் முருகதாஸ்!

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments