Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பாபு ஆண்டனி

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பாபு ஆண்டனி
, திங்கள், 27 ஏப்ரல் 2015 (10:42 IST)
பூவிழி வாசலிலே படத்தில் கடலை கொறித்தபடி, அந்தச் சின்னப் பையனையும், நம்மையும் பயப்பட வைத்த நடிகர் பாபு ஆண்டனிக்கு அறிமுகம் தேவையில்லை. அவ்வப்போது மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர் ஹாலிவுட படம் ஒன்றில் நடிக்கிறார்.
 
பாபு ஆண்டனி என்றால் கராத்தேதான் நினைவுவரும். கராத்தே என்ற கலையை பாபு ஆண்டனியின் மூலம் அறிந்து கொண்டவர்கள்தான் கேரளாவில் அதிகம். ஆஷிக் அபுவின் சமீபத்திய படம், இடுக்கி கோல்டில் பாபு ஆண்டனி கராத்தே வீரராகதான் வருவார். அவரது தோற்றமும், உயரமும், அவர் கற்ற கராத்தேயும்தான் இந்த ஹாலிவுட் வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.
 
படத்தின் பெயர், புல்லட்ஸ், ப்ளேட்ஸ் அண்ட் ப்ளட்.
 
ஜமாய்ங்க பாஸ்.

Share this Story:

Follow Webdunia tamil