Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபா ரி ரிலீஸ் தோல்வி… பின் வாங்கிய அஜித்தின் ஆழ்வார் !

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (17:51 IST)
ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று பாபா படம் ரி ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் படத்தில் இருந்து அரைமணிநேரம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சிக்கு ஆரவாரமான வரவேற்புக் கிடைத்த நிலையில் அதன் பின்னர் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளில் இருந்து எந்த திரையரங்கும் பாதி இருக்கைகளை கூட தாண்டவில்லையாம். மேலும் பல திரைகளில் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே டிக்கெட்கள் விற்பனை ஆனதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த தோல்வியால், அஜித்தின் ஆழ்வார் படத்தை ரி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்த அந்த பட தயாரிப்பாளர் இப்போது பின்வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments