Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கபாலியை காலி செய்த பாகுபலி-2 டிரெய்லர் - 5 மணி நேரத்தில் 50 லட்சம் பேர்

கபாலியை காலி செய்த பாகுபலி-2 டிரெய்லர் - 5 மணி நேரத்தில் 50 லட்சம் பேர்
, வெள்ளி, 17 மார்ச் 2017 (08:44 IST)
நேற்று வெளியிடப்பட்ட பாகுபலி-2 ட்ரெய்லர் விடீயோ, ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் டிரெய்லரை முறியடித்து சாதனை படைத்துள்ளது.


 

 
பாகுபலி-2 டிரெய்லர் நேற்று காலை ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. இணையத்தில் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், காலையிலேயே தெலுங்கு பதிவு ட்ரெய்லர் இணையத்தில் வெளியானது. எனவே, வேறு வழியில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில், கூறிய நேரத்திற்கு முன்பாகவே ட்ரெய்லர் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். 
 
இப்படத்தின் டிரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பல சினிமா ரசிகர்கள் இதனை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், பாகுபலி-2 ட்ரெய்லர் வீடியோ வெளியான 5 மணி நேரத்திலேயே யூடியூபில் 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 
 
8 மணி நேரத்தில் 1 கோடியை தாண்டியது. தற்போது வரை 2 கோடியே 17 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
 
இதற்கு முன்பு, ரஜினி நடிப்பில் வெளியான கபாலி பட டீசர் வெளியான 22 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்ததுதான் சாதனையாக இருந்தது. அதை 5 மணி நேரத்தில் முறியடித்து பாகுபலி-2 டிரெய்லர் வீடியோ முறியடித்துள்ளது.
 
இந்திய சினிமாவில் ஒரு டிரெய்லர் வீடியோ வெளியான 5 மணி நேரத்தில் 50 லட்சம் பேரால் பார்க்கப்பட்டது இதுதான் முதல் முறை எனக் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமாருக்கு ஜோடியாகும் விஜய் நாயகி