பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம், பாகுபலி தி கன்க்ளூசன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பேசிய ராஜமௌலி, பாகுபலியைச் சுற்றி நிறைய கதைகள் உள்ளன. அக்கதை முடிய வேண்டாம் என நினைக்கிறேன். கதைகள் தொடர்வதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன.
திரைப்படங்கள் அவற்றின் ஒரு பகுதிதான். ஆகையால் தொடர்ச்சியாக படங்கள் வெளிவரும். பாகுபலிக்கு முன், பின் என நிறைய கதைகள் உள்ளன என்று கூறினார்.
பாகுபலியின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதையே ராஜமௌலி இப்படி சூசகமாக அறிவித்ததாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரலில் பாகுபலியின் இரண்டாம் பாகம் திரைக்கு வருகிறது.