Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூஷன் திரைப்பட விழாவில் பாகுபலி

பூஷன் திரைப்பட விழாவில் பாகுபலி
, திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (20:47 IST)
திரையரங்குகளில் கரன்சியை அள்ளிய பாகுபலி சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெறப் போகிறது. தென் கொரியாவின் பூஷன் திரைப்பட விழாவில் பாகுபலி திரையிடப்பட உள்ளது.
 

 
அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பூஷன் சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. பத்து தினங்கள் நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவில் 75 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
 
பாகுபலி இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான படத்தில் பாடல்கள் உள்பட பல காட்சிகளை எடிட் செய்து சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்ப முடிவு செய்து, அதன்படி செம்மைப்படுத்தப்பட்ட பதிப்பையே சர்வதேச திரைப்பட விழாவுக்கு ராஜமௌலி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil