Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 26ல் வெளியாகும் ‘அயலி’ வெப்தொடர்.. எந்த ஓடிடியில்?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (22:29 IST)
இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அயலி' என்ற வெப்தொடர் 8 எபிசோடுகள் கொண்டது.  இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். 
 
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8-ம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய செய்யும் முயற்சிகள் தான் இந்த வெப்தொடரின் கதை
 
ஜீ5 ஓடிடியில் வெளியாகும் இந்த வெப் தொடர் குறித்து இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது, "இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுமக்களின் கண்ணோட்டத்தை வெற்றிகரமாக மாற்றியமைக்கக் கூடிய கதைகளை முன்வைக்கின்றன. மேலும் ஒரு பிரச்சாரமாக தோன்றாத வகையில் அந்த மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் எங்கள் உண்மையான முயற்சிதான் அயலி. இந்தத் தொடரானது, பெண்களின் கல்வி, அதிகாரம், அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாகும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றான இந்தக் கதையை காட்சிப்படுத்த எங்களுக்கு ஒரு தளத்தை வழங்கிய ஜீ5-க்கு நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்" என்று கூறியுள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments