Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் அயலான் இசை வெளியீட்டு விழாவில் நடந்த மாற்றம்!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (10:07 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ‘அயலா அயலா’ என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 26 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதே தேதியில் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அயலான் இசை வெளியீடு நடக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது.

இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்குமாறு டி எஸ் ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவர்களின் மனுவில் “அயலான் திரைப்படத்தை தயாரித்த 24 AM நிறுவனம் இந்த படத்துக்காக 10 கோடி ருபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த கடனை ஏற்றுக்கொண்ட கே ஜே ஆர் பிலிம்ஸ் நிறுவனம் 3 கோடி ரூபாய் மட்டும் கொடுத்துள்ளது. மீதம் பணத்தைக் கொடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது” என வழக்கு தொடுத்திருந்தது. இதை ஏற்று விசாரித்த நீதிமன்றம் அயலான் படத்தை நான்கு வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக் கூடாது தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments