Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் சான்றிதழ்: மூன்று மணிக்கு முடிவு செய்கிறது விலங்குகள் நல வாரியம்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (13:24 IST)
'மெர்சல்  படத்திற்கு சான்றிதழ் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை விலங்குகள் நலவாரியம் இன்று மதியம் மூன்று மணிக்கு முடிவை அறிவிக்கவுள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பும் விஜய் ரசிகர்களும் டென்ஷனில் உள்ளனர்.



 
 
'மெர்சல்' படத்தில் விலங்குகள் காட்சிகள் கிராபிக்ஸா? என்பது குறித்த ஆதாரங்களை படக்குழு விலங்குகள் நல வாரியத்திடம் தராததால் அவ்வாரியம் இதுவரை சான்றிதழ் அளிக்கவில்லை. எனவே இன்னும் இந்த படத்திற்கான சென்சார் சான்றிதழ் தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கவில்லை
 
படம் வெளியாக இரண்டே நாள் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இன்று காலை அவசரமாக கூடிய விலங்குகள் நலவாரியம் தற்போது அந்த படத்தை டெல்லி சிறப்பு அதிகாரி ஒருவருடன் பார்த்து கொண்டிருக்கின்றனர். படம் பார்த்து முடித்த பின்னர் இந்த படத்திற்கு சான்றிதழ் அளிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து மதியம் 3 மணிக்கு தங்கள் முடிவை அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் இந்த முடிவு கிடைத்த பின்னரே சென்னை திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments