Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லு அர்ஜுனுக்கு பதில் ராம்சரண் – ஷாருக் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தும் அட்லி!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (14:06 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இந்நிலையில் தற்போது ஷாருக் கானின் பதான் படத்தின் ப்ரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் ஜவான் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக் கான். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை அணுகி, அட்லி பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தில் நடிப்பது சம்மந்தமாக பேச அட்லி மற்றும் ஷாருக் கான் ஆகிய இருவரும் அல்லு அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர் புஷ்பா 2 காரணமாக நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அந்த வேடத்தில் நடிக்க ராம்சரணிடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments