Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 3 வருடத்தில் ஹாலிவுட் அறிவிப்பு வரும்… இயக்குனர் அட்லி தகவல்!

vinoth
ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (07:05 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதையடுத்து அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லியிடம் அடுத்து ஹாலிவுட் படத்தை இயக்கப் போகிறீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “ஆம் விரைவில் ஹாலிவுட்டில் இருந்து செய்தி வரும். நான் பாலிவுட் சினிமாவை எட்ட 8 ஆண்டுகள் ஆனது. இன்னும் 3 ஆண்டுகளில் ஹாலிவுட்டில் இருந்து அப்டேட் ஒன்று வரலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments