Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபிறவி கதையைக் கையில் எடுக்கும் அட்லி… எடையைக் குறைக்கும் சல்மான் கான்!

vinoth
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (12:04 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் சல்மான் கானோடு கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை நடிக்க வைக்க அட்லி முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சல்மான் கானை வைத்து அவர் இயக்கவுள்ள படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இது மறுபிறவி பற்றிய கதை என சொல்லப்படுகிறது. அதற்கான திரைக்கதை வேலைகளில் அட்லி தற்போது ஈடுபட்டு வரும் நிலையில் இந்த படத்தின் சில காட்சிகளுக்காக சல்மான் கான் எடையைக் குறைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments