Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

vinoth
வியாழன், 12 ஜூன் 2025 (12:45 IST)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் சாந்தணுவோடு இணைந்து ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ எனும் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படமும் அவருக்குத் திருப்புமுனையாக அமையவில்லை.

ஹிட் படங்கள் அமையவில்லை. அதனால் இப்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் ‘நீங்கள் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டீர்களா?” என்ற கேள்வியைப் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதுல்யா “அப்படி எந்த அறுவை சிகிச்சையும் நான் செய்யவில்லை. இதுபோன்ற தகவல் எல்லாம் எப்படி பரவுகிறது என்பதே எனக்குத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெர்சல் அரசன் வாரான்… விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கோட்டா சீனிவாசராவ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

எதிர்மறை விமர்சனங்களின் எதிரொலி… பாதியாகக் குறைந்த தக் லைஃப் படத்தின் காட்சிகள்…!

மகாராஜா வசூலில் பத்தில் ஒரு மடங்குதான்… VJS ன் ‘ஏஸ்’ பட வசூல் விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments