Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவியின் விழாவில் கலந்து கொள்வார்களா கமலும், ரஜினியும்?

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (11:01 IST)
தங்களுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவியின் விழாவில் கலந்துகொள்ள, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு அழைப்பு  அனுப்பப்பட்டுள்ளது.

 
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, ஹீரோயினாக வெற்றிக்கொடி நாட்டி, அம்மா கேரக்டரில் தன்னை  நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் ஸ்ரீதேவி. அவர் சினிமாவுக்கு வந்து அடுத்த மாதத்துடன் 50 வருடங்கள் ஆகிறது. 4 வயதாக இருக்கும்போது, 1967ஆம் ஆண்டு வெளியான ‘துணைவன்’ படத்தில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தமிழ்,  தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
 
அவருடைய 300வது படம் ‘மாம்’. அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. “ஸ்ரீதேவியைப் போல் இந்த மாதிரி  நீண்ட காலம் நடிகையாகத் திகழ்ந்தவர் இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது” எனப் புகழ்ந்துள்ளார் அவருடைய கணவர்  போனி கபூர். ஸ்ரீதேவியின் இந்த சாதனையை, மிகப்பெரிய விழாவாகக் கொண்டாட இருக்கின்றனர். இதில் கலந்துகொள்ள,  ஸ்ரீதேவியுடன் நடித்த ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments