Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் அசுரன் திரைப்படத்திற்கு விருது! – மகிழ்ச்சியில் படக்குழு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (15:55 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் திரைப்படம் ஜப்பான் நாட்டின் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் அசுரன். மஞ்சு வாரியர், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தனுஷின் சிவசாமி கதாப்பாத்திரம் மிக விமரிசையாக பேசப்பட்ட நிலையில் சமீபத்தில் நடந்த தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்காக அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிலும் அசுரன் பல விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை உள்ளிட்ட பிரிவுகளில் அசுரன் படம் இவ்விழாவில் விருதுகளை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் 64: திரைவாழ்வைத் தொடங்கிய நாளில் அடுத்த பட அப்டேட்.!

நான்கே வாரத்தில் நெட்ளிக்ஸில் சத்தமில்லாமல் ரிலீஸானது ‘தக் லைஃப்’…!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிசி’ டீசர் இணையத்தில் கசிந்தது.. படக்குழுவினர் அதிர்ச்சி!

சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்பு சீவி படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ!

தெலுங்கு படத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா ஸ்ருதிஹாசன்?

அடுத்த கட்டுரையில்
Show comments