Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் 'அசுரப்பாய்ச்சலில் 'அசுரன்' ஃபர்ஸ்ட்லுக்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (19:02 IST)
கடந்த ஆண்டு  வெளியான 'வடசென்னை' ,  'மாரி 2' போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து ' அசுரன் ' என்ற படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த படம் வெக்கை என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ' அசுரன் '  படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் தனுஷின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது . இந்த பர்ஸ்ட்லுக்கில் தனுஷ் அசுர வேகத்தில் கையில் ஈட்டியுடன்  பாய்ந்து வருவது போன்று உள்ளது . தனுஷின் இந்த அசுரப்பாய்ச்சல் பர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் தனுஷுடன் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் முக்கிய  வேடத்தில் நடிக்கவுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ள இந்த படத்தை  வெற்றிமாறன் இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் கவுதம் மேனன்- தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றொரு படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments