Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது?... ஆர்யா பகிர்ந்த தகவல்!

Webdunia
செவ்வாய், 13 மே 2025 (12:26 IST)
ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்திலும், ஆர்யா தன்னுடைய வேறு சில படங்களிலும் நடித்து வருவதால் சார்பட்டா 2 திரைப்படம் பற்றி அடுத்தகட்ட நகர்வு எதுவும் நடக்கவில்லை. படத்துக்கு பட்ஜெட்டாக சுமார் 80 கோடி ரூபாயை இயக்குனர் ரஞ்சித் கூறினாராம். இதனால் படத்தைத் தயாரிக்க முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்களில் ஒன்றான ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது பின் வாங்கிவிட்டதால் தற்போதைக்கு அந்த படம் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது ஆர்யா ‘சார்பட்டா 2’ படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என கூறியுள்ளார். மேலும் அவர் “தற்போது ரஞ்சித் ‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளதால் சார்பட்டா தொடங்குவதில் தாமதம் ஆகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

சில்க்கி கவுனில் ஸ்டைலிஷான போஸில் அசத்தும் ரெஜினா… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments