ஆர்யா முத்தையா இணையும் படம்… தொடங்குவது எப்போது?

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (15:53 IST)
ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இதையடுத்து அவர் இயக்கிய விருமன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஆர்யாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments