ஆர்யா- முத்தையா படம் ஆரம்பிக்கும் முன்பே தொடங்கிய வியாபாரம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:02 IST)
ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தை முத்தையா இயக்க உள்ளார். இந்த படத்தை முதலில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இப்போது கார்த்தியை வைத்து அவர் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஆர்யா நடிப்பில் முத்தையா ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்தைக் கமல் தயாரிக்காமல் டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பே தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் அந்த உரிமையை ஆர்யாவின் மாமனார்தான் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments