Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவிந்த்சாமி... கோலிவுட், பாலிவுட் ஹாலிவுட்

அரவிந்த்சாமி... கோலிவுட், பாலிவுட் ஹாலிவுட்
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:54 IST)
அரவிந்த்சாமியின் இரண்டாம் வருகை இவ்வளவு சிறப்பாக அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து, நாயகனையே விழுங்கியவர் அடுத்து பாலிவுட்டில் டியர் டாட் என்ற படத்தில் நடித்தார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


 
 
அதையடுத்து அவர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதற்காக அவர் தற்போது லண்டன் சென்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விரைவில் ஆங்கிலப் படத்தில் அரவிந்த்சாமியை பார்க்கலாம்.
 
தனி ஒருவனுக்குப் பிறகு அவர் போகன் படத்திலும், தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கான துருவாவிலும் நடித்தார். அதைத் தவிர வேறு படங்கள் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களின் சம உரிமைக்காக போராட வேண்டும்