Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி ஆர் தோற்றத்தில் அசத்தும் அரவிந்த் சுவாமி: "தலைவி" புதிய டீசர் இதோ!

Kangana Ranaut
Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (10:44 IST)
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பேசும் ‘தலைவி’ படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற திரைப்படங்களை இயக்கி சூப்பர் ஹிட் பியக்குனர் என ரசிகர்கள் மத்தியில் பெயரெடுத்தவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி .ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மணிகர்னிகா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். 
 
தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. ஜெயலிதாவாக நடித்திருந்த கங்கனாவை ட்ரோல் செய்து கலாய்த்து விட்டனர் நெட்டிசன்ஸ் . இதானால் படக்குழு மிகுந்த கவனத்துடன் படத்தை இயக்கி வந்த நிலையில் ஜனவரி 17-ம் தேதியான இன்று எம்.ஜி.ஆர் பிறந்த தினம் என்பதால் சற்றுமுன்  இப்படத்தின் இரண்டாம் லுக் டீசர் இணையத்தில் வெளிவந்து அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு அரவிந்த் ஸ்வாமியின் நடிப்பு குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments