அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

vinoth
திங்கள், 29 ஏப்ரல் 2024 (11:42 IST)
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார். இப்போது அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து அவர் மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் (க்ரிஷ் திருக்குமரன்) இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.  இந்த படத்துக்கு ரெட்ட தல என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமே என் எதிரி நீங்கதான்! புதுசா வந்த 4 பேரை டார்கெட் செய்த பாரு! தாக்குப்பிடிப்பார்களா ஹவுஸ்மேட்ஸ்!

ஓடிடி ரிலீஸூக்குப் பின் அதிகம் ட்ரால் ஆகும் தனுஷின் ‘இட்லி கடை’!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்!

தமிழ்ப் படங்களில் நானா நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்?... இலியானா எதிர் கேள்வி!

ரஜினியுடன் மோதும் எஸ் ஜே சூர்யா… கோவாவில் முழுவீச்சில் ஜெயிலர் 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments