Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல வரவேற்பைப் பெற்றும் ஓடிடியில் வியாபாரம் ஆகாத அருண் விஜய்யின் மிஷன் திரைப்படம்!

vinoth
வியாழன், 29 பிப்ரவரி 2024 (07:51 IST)
அருண் விஜய் கடந்த ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் மிஷன் 1 என்ற படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடிக்க படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா வாங்கி வெளியிடுவதாக அறிவித்தது.

இதையடுத்து பொங்கலை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய படங்களுக்கு நடுவே ரிலீஸ் ஆனாலும் இந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் ஒரு குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.

ஆனாலும் இந்த படம் இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆகும் படங்கள் 28 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடும் நிலையில் இந்த படம் 45 நாட்கள் ஆகியும் இன்னும் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் இந்த படம் இன்னும் எந்த ஓடிடியிலும் வியாபாரம் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. இதே போல ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி பிஸ்னஸும் இன்னும் முடியவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments