Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு ?

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (19:37 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார். தற்போது, அவர் பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும்  நிலையில்  சசிகலா வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார். 
 
அவருக்கு சென்னையில் 12 இடங்களில் வரவேற்பு அளிக்க தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
 
இதற்காக அமமுக கட்சி தலைவர் டிடிவி உட்பட சசிகலாவின் தொண்டர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சசிகலா வருகையை எண்ணி பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது என டிடிவி கூறியுள்ளார்.
 
மேலும் எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட அன்பு வேண்டுகோள் விடுத்துள்ள டி.டி.வி தினகரன் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க காவல்துறை அனுமதியும் பெற்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், சசிகலா வருகையின் போது அவருக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ அவரது ஆதரவாளர்கள் காவல்துறையில் அனுமதி கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments