Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருண் வைத்தியநாதனின் ஆக்ஷன் த்ரில்லரில் நடிக்கும் அர்ஜுன்

அருண் வைத்தியநாதனின் ஆக்ஷன் த்ரில்லரில் நடிக்கும் அர்ஜுன்
, வெள்ளி, 17 ஜூலை 2015 (16:14 IST)
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் அதன் பிறகு, கல்யாண சமையல் சாதம் படத்தை தயாரித்தார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த பெருச்சாளி படத்தை இயக்கினார்.
 
தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். இந்தமுறை இயக்குனராக.
 
இவர் அர்ஜுனை வைத்து ஆக்ஷன் த்ரில்லர் ஒன்றை இயக்க உள்ளார். அர்ஜுனுக்கு போலீஸ் வேடம். வழக்கமான ஆக்ரோஷமான போலீஸ் அல்ல. அமைதியான, தனது புத்திசாலித்தனத்தை வைத்து செயல்படும் போலீஸ்.
 
இந்த த்ரில்லர் அடுத்த மாதம் தொடங்குகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil