Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150வது படத்தைத் தொட்ட அர்ஜுன்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (13:04 IST)
‘ஆக்‌ஷன் கிங்’ என்று போற்றப்படும் அர்ஜுன், தன்னுடைய 150வது படத்தைத் தொட்டுள்ளார்.

  
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன். கன்னடப் படங்களின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர், ‘நன்றி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், ஷங்கரின் ‘ஜெண்டில்மேன்’ அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது. அந்தப் படத்திற்காக, சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது பெற்றார்.
 
கிட்டத்தட்ட 40 வருடங்களை சினிமாவில் தொடப்போகும் அர்ஜுன், தன்னுடைய 150வது படத்தில் நடித்துள்ளார். அருண் வைத்யநாதன் இயக்கியுள்ள ‘நிபுணன்’ படம்தான் அது. ஃபேஷன் ஸ்டுடியோ சார்பில், அருண் வைத்யநாதனே தன்  நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பிரசன்னா, வரலட்சுமி, சுஹாசினி ஆகியோரும் இந்தப் படத்தில்  நடித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments