Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்…. அதுவும் இந்த படத்தின் ரீமேக்கிலா?

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (14:51 IST)
நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் அவரின் கதாபாத்திரங்களின் மூலம் கவனம் பெற்றார்.

கைதி படத்தின் மூலம் மக்கள் மனதில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் ரிலீஸான விக்ரம் படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வசந்தபாலன் இயக்கும் ‘அநீதி’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ள மலையாள ஹிட் படமான ‘அங்கமாலி டைரீஸ்’ ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் மதுமிதா இயக்க உள்ளார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments