Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனி லைவ் தயாரிப்பில் அருண் விஜய்… இயக்குனர் இவர்தானாம்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (17:55 IST)
புதிதாக தமிழில் கால் பதித்துள்ள சோனி லைவ் ஓடிடி தளம் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாம்.

கொரோனா கால கட்டுப்பாடுகள் திரையரங்குகளை முடக்கியுள்ள நிலையில் ஓடிடிகளின் பெருக்கம் அதிகமாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜி 5 மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸார் ஆகிய ஓடிடி தளங்கள் செல்வாக்கை செலுத்தி வருகின்றன. இந்நிலையில் இப்போது சோனி லைவ் என்ற புதிய தமிழ் ஓடிடி அறிமுகமாக உள்ளது.

ஏற்கனவே இந்தியில் முன்னணி ஓடிடி நிறுவனமாக இருக்கும் சோனி லைவ் இப்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறது. ஜூன் 25 ஆம் தேதி முதல் இந்த ஓடிடி செயல்பட தொடங்க உள்ளது. முதல் படமாக விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற தேன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதன் பின்னர் நரகாசூரன், கடைசி விவசாயி உள்ளிட்ட பல படங்கள் வரிசையாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஓடிடி மட்டும் இல்லாது இப்போது திரைப்பட தயாரிப்பிலும் இறங்க முன்வந்துள்ளதாம். முதல் படமாக சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தைக் கைப்பற்றியுள்ளதாம். அதேபோல அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கும் படத்தைத் தயாரிக்க உள்ளதாம். இந்த கூட்டணியில் ஏற்கனவே குற்றம் 23 மற்றும் பார்டர் ஆகிய படங்களில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments