Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ரஜினி, கமலுக்குப் போட்டியா..??’’ அரசியலுக்கு வருவேன் -நடிகர் பார்த்திபன்

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (20:33 IST)
அரசியலில் ஆர்வம் உள்ளதால் எதிர்காலத்தில் அரசியலுக்கு  வருவேன் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் நடித்து இயக்கிய ’ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்த படம் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய இந்த படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் விருது ஒன்று பெற்றுள்ளது

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை நடத்திய இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது ’ஒத்த செருப்பு’படத்திற்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து விருது மற்றும் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையை இயக்குனர் பார்த்திபனுக்கு புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் அவர்கள் வழங்கினார்.

விருதை உற்சாகமாகப்ம் பெற்றுக்கொண்ட பின் பேசிய பார்த்தியன், எனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் தான் புரட்சியுடன் அரசியலுக்கு வரவுள்ளதாகக் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தகக்து.

ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு மேலும் ஒரு விருது கிடைத்தது குறித்து தான் பெருமைப்படுவதாக இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டி.ராஜேந்தர். கார்த்திக், கமல்,ரஜினி, விஜயகாந்த்,சரத்குமார் போன்றோர் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் நடிகர் பார்த்திபனும் இந்த லிஸ்டில் இணையவுள்ளார் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.#ActorParthiban

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments