Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

Siva
புதன், 25 ஜூன் 2025 (16:43 IST)
அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தின் கதையை அஜித்திடம் நேரில் சொல்ல தனுஷ் பலமுறை முயற்சித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அஜித் இந்தியாவில் இருக்கும்போது தனுஷ் வெளிநாட்டிலும், தனுஷ் இந்தியா திரும்பியபோது அஜித் வெளிநாட்டிலும் இருந்ததால், இருவரின் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது.
 
இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின்படி, அஜித் தற்போது துபாயில் இருக்கிறார். அவரை துபாய் சென்று தனுஷ் சந்திக்க இருப்பதாகவும், அப்போது அவர் கதையை சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தனுஷ் துபாய் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தனுஷ் சொல்லும் கதை அஜித்துக்கு பிடித்துவிட்டால், ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை அடுத்து தனுஷ் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அஜித்தே முடிவு செய்ய தனுஷ் திட்டமிட்டிருப்பதாகவும், தயாரிப்பாளர் விஷயத்தில் தான் தலையிட மாட்டார் என்று அஜித் தரப்பிடம் உறுதி அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த கூட்டணி உருவானால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேப்டன் இருந்திருந்தால் ரஜினிகாந்துக்குப் பாராட்டு விழா நடத்தியிருப்பார் – பிரேமலதா வேண்டுகோள்!

கூலி படத்துக்குத் தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சி எத்தனை மணிக்கு? வெளியான தகவல்!

விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

சிம்புவின் 3 மாத கால்ஷீட்டை வேஸ்ட் செய்தாரா வெற்றிமாறன்.. அடுத்த படம் என்ன?

’கூலி’ படத்திற்கு 2 வாரங்கள் தான் டைம்.. அதன் பின் வெளியாகும் 5 படங்கள்.. வசூலை எடுக்க முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments