Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி ஆகும் அர்ச்சனா: கலகலப்பு ஆரம்பமா?

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (15:29 IST)
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கப்பட்ட நிலையில் 16 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர் என்பதும் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நால்வரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் தெரிந்ததே. அனேகமாக ஷிவானி அல்லது சனம்ஷெட்டி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் ஒருவர் என அர்ச்சனா என்பது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்தன. ஆனால் அவர் முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நிலையில் திடீரென அவர் பின்வாங்கி விட்டதாகவும் அவர் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நுழைய இருப்பதாகவும் சனம்ஷெட்டி அல்லது சிவானி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவதும் அர்ச்சனாவின் வருகையும் ஒரே நாளில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் தற்போது அறந்தாங்கி நிஷா உள்பட ஒரு சிலரால் கலகலப்பாக இருக்கும் நிலையில் அர்ச்சனா உள்ளே வந்தால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments