Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பட்டா வெற்றியின் பலனை அனுபவிக்கும் சுந்தர் சி… அரண்மனை 3 இத்தனைக் கோடி வியாபாரமா?

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:50 IST)
அரண்மனை 3 ஆயுதபூஜை நாளில் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது அதன் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ’அரண்மனை 3’திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகை குஷ்பூ நேற்று தனது ட்விட்டர் வாயிலாக உறுதிபடுத்தினார்.

இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம்தான் அனைவரையும் ஆச்சர்யப் படவைத்துள்ளது. 33 கோடி ரூபாய்க்கு இந்த படம் மொத்தமாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். இது இதுவரை ஆர்யா படத்துக்கு இல்லாத வியாபாரம். பிரம்மாண்ட வியாபாரத்துக்கு சார்பட்டா பரம்பரை வெற்றிதான் காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சி ஷூட்டிங்கைக் கண்டுகொள்ளாத அஜித்…. இதுதான் காரணமா?

மனைவி தொடர்ந்த ஜீவனாம்சம் வழக்கு..! பிரபல நடிகருக்கு கைது வாரண்ட்..!

விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் கோட் செகண்ட் சிங்கிள்!

கங்குவா படம் எப்போது ரிலீஸ்… தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த அப்டேட்!

மீண்டும் வெற்றிப்பாதையில் கோலிவுட் திரையுலகம்.. மூன்று படங்கள் தொடர் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments