Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷுடன் மோத தயாராகி வரும் நயன்தாரா

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (00:08 IST)
தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 


இந்த நிலையில் நயன்தாராவின் 'அறம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டதால் இந்த படமும் ஜூலையில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அனேகமாக 'விஐபி 2' படத்துடன் நயன்தாராவின் 'அறம்' மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'அறம்' படத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டராக முதன்முதலாக நடித்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நயன்தாரா நடித்து வரும் இன்னொரு படமான 'இமைக்கா நொடிகள்' திரைப்படமும் அடுத்த இரண்டு மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு நயன்தாராவுக்கு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

எம் ஜி ஆர் தமிழ் சினிமா கணிப்பு க்ளைமேக்ஸ் 10 நிமிஷத்துக்கு

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments