வைரமுத்து பற்றி என்னிடம் சில பாடகிகள் புகார் கூறினர் - ஏ.ஆர்.ரகுமான் சகோதரி பேட்டி

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (11:56 IST)
கவிஞர் வைரமுத்து பற்றி சில பாடகிகள் தன்னிடம் புகார் கூறியதாக ஏ.ஆர்.ரகுமான் சகோதரியும், இசையமைப்பாளருமான ரேஹைனா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

 
இதுவரை எந்த புகாரில் சிக்காத கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறியது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. என்  மீது தவறிருந்தால் வழக்கு தொடுக்கலாம். காத்திருக்கிறேன் என வைரமுத்து கூறிவிட்டார். 
 
இந்நிலையி, சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “ வைரமுத்து மிகவும் பெரிய மனிதர். அவரை பற்றி எப்படி பேசுவது? ஆனால், அவரை பற்றி சில பாடகிகள் என்னிடமும் புகார் கூறியுள்ளனர். எனவே, உண்மை எது என தெரியவில்லை. அதேநேரம், பெண்கள் மீதான பாலியல் தொல்லை அனைத்து இடங்களிலும் இருக்கிறது. வைரமுத்துவை மட்டும் டார்கெட் செய்யக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்