Webdunia - Bharat's app for daily news and videos

Install App

OTT தளத்தில் வெளியாகும் அனுஷ்காவின் நிசப்தம்

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (14:18 IST)
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி  தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “நிசப்தம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே , அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு , ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் விறு விறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்தது. வாய் பேசமுடியாமல், காது கேட்காமல் பேய்களிடம் மாட்டிக்கொள்ளும் அனுஷ்காவை அஞ்சலி காப்பாற்றி உண்மை என்ன என்பதை கண் டறிகிறார்.

பின்னர் இதெல்லாம் பேய்களால் நடக்கிறது என்பதை அறிந்துகொண்ட அஞ்சலி அதன் மீது நம்பிக்கையில்லாமல் அனுஷ்காவுக்கு யாரோ உதவுவதாக நினைக்கிறார். பின்னர் துரித விசாரணை மேற்கொண்டு மாதவன் யார் என்பதையும், இந்த கொலை அத்தனையும் அனுஷ்கா தான் செய்தாரா என பல கோணத்தில் விசாரணை நடத்துகிறார் அஞ்சலி.

விறு விறுப்பான இந்த படம் ரசிகர்களுக்கு வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தை பிரபல இணையதளமான அமேசான் பிரைம் நேரடி வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments